சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் திட்டம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியை பிரிந்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதி வருத்தத்துடன் இருக்க கார்த்திக் அவளுக்கு போன் செய்து ஆறுதல் சொல்லி சாப்பிட சொல்கிறான். இங்கே கார்த்திக் வருத்தமாக இருக்க பரமேஸ்வரி பாட்டி கவலைப்படாத என ஆறுதல் சொல்கிறார்.
இதற்கிடையில் சந்திரகலா கார்த்திக்கை சந்தித்து நக்கல் அடிக்கிறாள்.
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார அங்கு வந்த ரேவதி சாப்பாட்டை போட்டோ எடுத்து கார்த்திக் அனுப்பி கார்த்திக் மாமா சொல்லி தான் சாப்பிட வந்தேன் என்று சொல்லி சாமுண்டீஸ்வரி வெறுப்பேற்றுகிறாள்.
ரூமுக்குள் சென்ற சாமுண்டீஸ்வரி பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்து கோபத்தை கொட்டுகிறாள். பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி சந்தித்து ஒரு பிளாட்டை பார்க்க போக வேண்டும் என்று சொல்கிறாள்.
அடுத்த நாள் இவர்கள் அந்த பாட்டுக்கு போக தயாராக சிவனாண்டி ரவுடிகளை தயார் செய்து சாமுண்டீஸ்வரி போட்டோவை காண்பித்து கொன்று விடுமாறு சொல்கிறான். மேலும் அந்தப் பழியை கார்த்தியின் மீது போடவும் திட்டமிடுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
