அசோக் செல்வனின் அன்பில் அவன் ரிலீஸ் தள்ளிவைப்பு! காரணம் இதுதான்
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் அன்பில் அவன் படம் இந்த வாரம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போர் தொழில் படப்புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
படத்தை அசோக் செல்வன் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக ப்ரமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது திடீரென படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கின்றனர் .
காரணம்
படத்திற்கு ப்ரொமோஷனில்ல் அதிகம் வரவேற்பு கிடைத்திருப்பதால் இன்னும் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைப்பதாக அசோக் செல்வன் தெரிவித்திருக்கிறார்.
படக்குழு வெளியிட்ட அறிக்கை இதோ.
