திரு, திவ்யா கல்யாணத்தில் வந்த பிரச்சனை.. மகா எடுத்த முடிவு
திருமாங்கல்யம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அம்பிகா ஆஞ்சனாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக திருவை அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வீட்டுக்கு வந்த திருவிடம் திவ்யா நீ என் அம்மாவை அவமானப்படுத்தி பேசிட்ட..
இது கல்யாணம் வேண்டாம் என்று பேச இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வாக்குவாதமும் உருவாகி திரு அங்கிருந்து திரும்பி வந்து விடுகிறான்.
பிறகு திவ்யா ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள பிரபாகரனும் காஞ்சனாவும் கதவை தட்டியும் திவ்யா திறக்க மறுக்கிறாள்.
இந்த சமயத்தில் மகா அங்கு வர காஞ்சனா நீ எதுக்கு இங்க வந்த என்று கோபப்படுகிறாள்.
மகாவின் குரலை கேட்ட திவ்யா ரூம் கதவை திறக்க மகா ரூமுக்குள் செல்கிறாள். பிரபாகரன் நீ போய் பேசு என அனுப்பி வைக்கிறான்.
பிறகு மகா திவ்யாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். ஆனாலும் திவ்யா தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
பிறகு மகா திவ்யாவை சாப்பிட வைக்க சாப்பாடு கொண்டு வருவதற்காக கீழே செல்கிறாள்.
மேலும் திவ்யாவுக்கு தெரியாமல் அவளது ஃபோனில் இருந்து திருவுக்கு ஒரு மிஸ்டு காலை கொடுக்கிறாள்.
அடுத்ததாக மகா திவ்யாவுக்கு சாப்பாடு ஊட்டி விட திவ்யா மகா அடிபட்டு ரோட்டில் விழுந்து கிடந்து போது செய்த உதவியை நினைத்துப் பார்த்து எமோஷனல் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
