6 நாளில் மோசமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்துள்ள கார்த்தியின் சர்தார் 2… தமிழகத்தில் இவ்வளவுதானா?
சர்தார் 2
சர்தார், முதல் பாகம் நன்றாக ஓட நடிகர் கார்த்தி நடித்த இரண்டாம் பாகம் தான் சர்தார் 2.
கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் பாகம் செம ஹிட்டானது.
இதையடுத்து மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் படம் சொதப்பியது.
ரூ. 80 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 21 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் படம் 6 நாள் முடிவில் ரூ. 10 கோடி தான் வசூலித்துள்ளதாம்.
