ஜெய்லர் 2 வியாபாரம், இத்தனை கோடிகளா, ரஜினி தான் என்றும் நம்பர் 1


ஜெய்லர் 2

 ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன படம் ஜெய்லர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி ஜெய்லர் 2-வில் இன்னும் பிரமாண்டமாக இணைய, இப்படம் அக்டோபர் மாதம் 15ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கி விட்டது, அனைத்து இடங்களிலும் இப்படத்திற்கு ரெக்கார்ட் வியாபாரம் தான் நடந்துள்ளதாம்.

அதை வைத்து பார்க்கையில் சாட்டிலைட் சன் நிறுவனம் என்றாலும், அதன் தோராய விலை, டிஜிட்டல் ரைட்ஸ், மியூஸிக் ரைட்ஸ் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா/தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஹிந்தி மற்றும் ஓவர்சீஸ் ரைட்ஸ் என அனைத்தும் சேர்த்து ரூ 600 கோடிகள் இப்படத்தின் வியாபாரம் தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகர் படமும் இத்தகையா வியாபாரத்தை எட்டியது இல்லை, கண்டிப்பாக இன்றும் ரஜினி தான் நம்பர் 1 என இதன்மூலம் தெரியவந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *