மீண்டும் ஜெயா டிவியில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி.. தொகுத்து வழங்குகிறார் நடிகை குஷ்பூ
ஜெயா டிவியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 13) ஒளிபரப்பாகவுள்ளது. இதனை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்குகிறார்.
‘ஜாக்பாட்’
முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜெயா டிவியில் கடந்த 15 வருடங்களுக்கு முன் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ‘ஜாக்பாட்’. இதனை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கி வந்தார். 90ஸ் கிட்ஸ் இந்த நிகழ்ச்சியை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
மீண்டும் ‘ஜாக்பாட்’
இந்த நிலையில், மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பின் ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி ஜெயா டிவியில் இன்று செப்டம்பர் 13-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது.
புதிய அரங்கம், புதிய சுற்றுகள், சவால்கள் என பல புதுமைகளுடன் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையும் 3 அணிகளுக்கு இடையிலான போட்டியாகவே இதனை உருவாக்கியுள்ளனர். கணவன் – மனைவி, நண்பர்கள் என என்ன உறவாக இருந்தாலும் ஓர் அணியாக இணைந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
ரூ. 10 லட்சம்
இந்த போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இறுதியில் ரூ. 10 லட்சம் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு சிறப்பு பரிசுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
