மண்டாடி திரை விமர்சனம்


வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் மதிமாறன் புகழேந்தி, காமெடியன் டூ ஹீரோ சூரி தொடர் வெற்றி நாயகனாக வருபவர், இவர்கள் இணைந்து கொடுத்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா மண்டாடி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

மண்டாடி திரை விமர்சனம் | Mandaadi Movie Review

கதைக்களம்


சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார். அவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்தில் படகு போட்டி சண்டையால் சாட்டைபுலி(சுஹாஸ்) மகனை, மாரி என்பவர் கொல்ல முயற்சிக்கிறார். இதனால் மாரியை கொல்ல சாட்டைபுலி துணிய, மாரியை சூரியிடம் தஞ்சம் போக சொல்கின்றனர்.

சூரி அவர் தன் முன்னாள் காதலி மகன் என்பதை தெரிந்துக்கொண்டு பல வருடம் கழித்து தன் ஊருக்கு வந்து மாரி உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என பஞ்சாயத்து பேசுகிறார்.

மண்டாடி திரை விமர்சனம் | Mandaadi Movie Review

அப்போது சாட்டைபுலி அப்படியென்றால் நம்ம இரண்டு வகையறாவும் படகு போட்டி வைத்துகொள்வோம், அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, தோற்றவர்கள் இனி போட்டியில் இறங்ககூடாது என பேசி முடிக்கின்றனர்.

இதன் பிறகு சூரி படகு போட்டியில் மாரியை ஜெயிக்க வைத்து, சாட்டைபுலியை வென்றாரா? சூரிக்கும், சாட்டைபுலிக்கும் என்ன பிரச்சனை ஏன் இவ்வளவு கோபத்துடன் ஒருவர் மீது ஒருவர் இருக்கிறார் என்பதே மீதிக்கதை.

மண்டாடி திரை விமர்சனம் | Mandaadi Movie Review

படத்தை பற்றிய அலசல்



சூரி இனி ஆக்‌ஷன் ஹீரோ தான் போல, அப்படியே மீனவ குடும்ப நபராக மனதில் நிற்கிறார், அதிலும் போட் போட்டி காட்சிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடம், சாட்டைபுலி மகன் செய்த செயலால் தன் ப்ளேயர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போடு, இறங்கி அடிக்கும் போது அப்படியொரு ஆக்ரோஷன், கண்டிப்பாக சூரி திரைப்பயணத்தில் மற்றொரு மைல்கல் தான் இந்த மண்டாடி.


இவரை தாண்டி சுஹாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும், லிப் சிங்க் எங்கும் மிஸ்டேக் ஆகவில்லை, வெற்றிமாறன் தான் டப்பிங் பேசியிருப்பார் போல, கச்சிதமாக பொருந்தி போகிறது குரல், மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.

மண்டாடி திரை விமர்சனம் | Mandaadi Movie Review

இதை தாண்டி மாரி, சாட்டை புல் மகன், மஹிமா, சத்யராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர், படத்தின் முதல் பாதி சூரி திரும்பி வந்து படகு போட்டி கோச்சிங் கொடுப்பது, பிறகு ட்ரெயினிங் மேட்ச் அதை தொடர்ந்து எடுக்கும் சபதம் என செம விறுவிறுப்பாகவே செல்கிறது.


அதிலும் அந்த ட்ரெயினிங் மேட் படகு போட்டி அத்தனை பிரமாண்டம், ரசிகர்களுக்கு சீட் எட்ஜ் காட்சிகளாக கவர்ந்து இழுத்துள்ளனர். கண்டிப்பாக சார்பட்டா பாக்ஸிங், ஆடுகளம் சேவல் சண்டை போல் இந்த மண்டாடி படகு போட்டியும் மனதில் நிற்கும்.

இரண்டாம் பாதி சத்யராஜ் முனி என்ற கதாபாத்திரத்தில் கோச் ஆக வர, சூரிக்கும், சாட்டைபுலிக்கும் இருந்த உறவு என்ன, இவர்களுக்குள் என்ன பகை, ஏன் இந்தளவு வந்தது, மஹிமாவை ஏன் சூரி கைவிட்டார், சத்யராஜ் என்ன ஆனார் என்ற பல காரணங்களை சொல்ல ப்ளாஷ்பேக் கொஞ்சம் பொறுமையை சில இடங்களில் சோதிக்கிறது.

மண்டாடி திரை விமர்சனம் | Mandaadi Movie Review

ஆனால், அதை தொடர்ந்து வரும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம் படகு போட்டி வெறித்தனம், கண்டிப்பாக ஸ்போர்ட்ஸ் விரும்பிகளுக்கு செம திரை விருந்து.

டெக்னிக்கல் விஷயம் என்று பார்த்தால் படம் முழுவதும் லைவ் லொக்கேஷன், படகு போட்டி என அனைத்தையும் யதார்த்தமாக காட்டிய ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷ் இசை பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்ல்லை, பின்னணி இசை அருமை.

க்ளாப்ஸ்


  • சூரிஒன் மேன் ஷோ போல் மிரட்டியுள்ளார், சுஹாஸ் தெலுங்கு நடிகர் தமிழுக்கு நல்ல வரவேற்பு.

  • படகு போட்டி காட்சிகள்

  • கிளைமேக்ஸ், இடைவேளை

  • ஒளிப்பதிவு



பல்ப்ஸ்


  • ப்ளாஷ்பேக் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்.


  • படகு போட்டி குறித்து இன்னும் விவரமாக கூறியிருக்கலாம்.


மொத்தத்தில் மண்டாடி சூரியின் வெற்றிபயணம் இந்த படகு போட்டியிலும் வென்று தொடர்கிறது.

மண்டாடி திரை விமர்சனம் | Mandaadi Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *