சர்தார் 2 மற்றும் மண்டாடி திரைப்படங்களின் முன்பதிவு வசூல் விவரம்
இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரவிருக்கும் சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் தமிழ் சினிமா
ஒவ்வொரு வாரமும் புதிய படைப்புகள் தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் வெளிவந்த இம்மார்ட்டல் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த வாரம் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் சூரியின் மண்டாடி என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகின்றன.
முன்பதிவு வசூல்
நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிவரவிருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்த இரு படங்களும் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
சர்தார் 2
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதையெல்லாம் தாண்டி ரசிகர்களால் நடிப்பு அரக்கன், வில்லாதி வில்லன் என அழைக்கப்படும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரையிலான டிக்கெட் முன்பதிவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மண்டாடி
தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக உருவாகிவிட்டார் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டாடி. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை நடந்த டிக்கெட் முன்பதிவில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
