5 நாட்களில் உலகளவில் ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் செய்துள்ள வசூல்
கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம், 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘இம்மார்ட்டல்’
குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, டாடா, லப்பர் பந்து மற்றும் சமீபத்தில் வெளியான மொத ராத்திரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது ‘இம்மார்ட்டல்’ திரைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க, லொள்ளு சபா மாறன், கதிர், டி.எம். கார்த்திக் ஸ்ரீனிவாசன், குமார் நட்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. மேலும், முதல் நாளிலிருந்தே வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த ‘இம்மார்ட்டல்’ திரைப்படம், 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் உலகளவில் ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
