அப்பத்தாவின் சுயரூபத்தை அறியும் லோகு.. தேனை தேடி வந்த மனோ
வாகை சூடவா
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா.
இன்றைய எபிசோடில் லோகு அப்பத்தாவின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ளும் நிலையில், தேன்மொழியை வீட்டிற்கு அழைத்து வர மனோ எடுத்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சுமதி ஜீவாவை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள, அதை ரசிக்கும் ஜீவாவை பார்த்து மீனாட்சி கடுப்படைகிறாள். “உன்னை இந்த வீட்டுக்கு விருந்து வைக்க அழைக்கலை, போனா போகட்டும்னுதான் உள்ளே விட்டேன்” என்று கூற, ஜீவாவும் “இது என் மாமியார் வீடு தானே” என்று பதிலடி கொடுக்கிறான்.
ஆனால் ஒரு கட்டத்தில் அதிகமாக பேசினால் மீனாட்சி தன்னை வெளியே அனுப்பிவிடக்கூடும் என்பதை புரிந்து கொண்ட ஜீவா, அமைதியாக இருக்க முடிவு செய்கிறான்.
மறுபக்கம் உடல்நலக்குறைவால் அவதிப்படும் சக்தியை லோகு கவனித்துக் கொள்கிறார்.
அவளுக்கு மாத்திரை வாங்கி வந்து கொடுத்து, “நீ ரெஸ்ட் எடு, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆறுதல் கூறுகிறார்.
பின்னர் தூங்கி எழுந்த அப்பத்தா, “உன் பொண்டாட்டி இன்னும் சமைக்கலையா?” என்று லோகுவிடம் கேட்கிறார். சக்திக்கு உடல்நிலை சரியில்லை என்று லோகு கூறியதும், “உடம்பு முடியலன்னா மாத்திரை போட்டுட்டு வேலை செய்ய வேண்டியது தானே” என்று ஈவு இரக்கமின்றி பேசுகிறார்.
இதைக் கேட்டு அப்பத்தா சக்தியை குடும்ப உறுப்பினராக அல்லாமல் ஒரு வேலையாளாகவே பார்க்கிறார் என்பதை லோகு புரிந்து கொள்கிறார்.
வீட்டில் வேலை செய்ய யாரும் இல்லாததால், அப்பத்தா மனோவை அழைத்து தேன்மொழியை கூட்டி வர அனுப்புகிறார். மனோ சுமதி வீட்டிற்கு சென்று கதவை தட்ட, தேன்மொழி கதவை திறக்கிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த தருணம் உணர்ச்சிகரமாக அமைகிறது.
தேன்மொழியை வீட்டிற்கு வருமாறு மனோ அழைக்க, மீனாட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். “அவளுக்காக நீங்க என்ன பண்ணீங்க? உங்க வாரிசை அழிக்க பார்த்தப்போ கூட அமைதியா நின்னீங்க. உங்களை நம்பி எப்படி அவளை அனுப்ப முடியும்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.
இதையடுத்து மனோ ஜீவாவையும் வீட்டிற்கு வர அழைக்க, “என் பொண்டாட்டி இருக்கிற இடத்துலதான் நான் இருப்பேன். வர முடியாதுன்னு போய் அப்பத்தாகிட்ட சொல்லு” என்று ஜீவா உறுதியாக பதிலளிக்கிறார்.
இப்படியான சூழலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, வாகை சூடவா சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
