கமல் ஹாசனின் அடுத்த படம்.. வெளிவந்த புகைப்படம்.. இயக்குநர் யார் தெரியுமா?


உலகநாயகன் கமல் ஹாசனின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.


கமல் ஹாசன்



உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு தக் லைஃப் திரைப்படம் வெளியானது. மணி ரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கமல் நடித்துள்ளதால் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கமல் ஹாசனின் அடுத்த படம்.. வெளிவந்த புகைப்படம்.. இயக்குநர் யார் தெரியுமா? | Kamal Haasan Next Movie With Su Arunkumar

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் படுதோல்வியை சந்தித்தது.

தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து கல்கி இரண்டாம் பாகத்தில் வில்லனாக கமல் ஹாசன் நடித்து வருகிறார். மேலும், பல ஆண்டுகளாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரஜினி – கமல் காம்போ இணைந்துள்ளது.

கமல் ஹாசனின் அடுத்த படம்.. வெளிவந்த புகைப்படம்.. இயக்குநர் யார் தெரியுமா? | Kamal Haasan Next Movie With Su Arunkumar

இதை தவிர்த்து அன்பு அறிவு இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ள படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி சேயோன், தர்மன் போன்ற முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களையும் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.



SU அருண்குமார் – கமல் ஹாசன்


இந்நிலையில், பிரபல இயக்குநர் SU அருண்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்துள்ளது.

கமல் ஹாசனின் அடுத்த படம்.. வெளிவந்த புகைப்படம்.. இயக்குநர் யார் தெரியுமா? | Kamal Haasan Next Movie With Su Arunkumar

அதனை ராஜ்கமல் நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் SU அருண்குமார் இதற்கு முன் சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *