சேரன்-சந்தா திருமணத்திற்கு இடையில் செம கொண்டாட்டத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகை… ஏன் தெரியுமா?
அய்யனார் துணை
ஒருவருக்கு ஒரு முறை திருமணம் தடைபடலாம், அடுத்தடுத்து தடைப்பட்டால் அவருக்கு கல்யாணம் நடக்குமா என்ற சந்தேகம் அவருடன் இருப்பவர்களுக்கே வந்துவிடும்.
அப்படி தாலி கட்டுவதை சென்றெல்லாம் சேரன் திருமணம் நின்றுள்ளது. எப்படியோ சேரன் காதலித்த சந்தாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். கோலாகலமாக பீகாரில் நிச்சயதார்த்தம் முடிந்தது, அடுத்து திருமணம் சென்னையில் நடக்க உள்ளது.
ஆனால் திருமணத்திற்கு கிளம்பிய சந்தா குடும்பத்தினரை அவரது மாமா வீட்டிலேயே அடைத்து வைக்கிறார். அங்கிருந்து தப்பித்து எப்படி சந்தா திருமணம் செய்யும் இடத்திற்கு வரப்போகிறார் என தெரியவில்லை.
ஸ்பெஷல்
சந்தா வருவாரா இல்லையா என்ற பெரிய குழப்பத்துடன் தொடரின் கதைக்களம் இப்போது நகர ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது சீரியலில் நிலாவாக நடிக்கும் நடிகை மதுமிதா ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகி 500 எபிசோடுகள் எட்டிவிட்டதாம். இதனை நினைவுகூறும் வகையில் அவர் சீரியல் படப்பிடிப்பில் எடுத்த ஸ்பெஷல் புகைப்படங்களுடன் ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.
