இந்துவின் காதலை வெளியே கொண்டு வர என்ட்ரி கொடுக்கும் லேடி- சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகளுக்கான சாப்பாட்டில் பேதி மருந்தை கலந்த புவனா மீது கடும் கோபத்தை காட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இந்து பேதி மருந்து கலந்த சாப்பாட்டை புவனா வாயில் திணித்து விட போன அதிர்ச்சி அடைந்து நிற்க கடைசியில் அதுல எதுவும் கலக்கல பிழைத்து போ என இந்து மன்னித்து விடுகிறாள்.
பிறகு ஜெயந்தி போன செய்ததுக்காக இந்துவிடம் மன்னிப்பு கேட்டு புவனாவை வீட்டை விட்டு வெளியே போக செல்கிறாள்.
இந்த சமயத்தில் கிருபா வீட்டுக்கு வர புவனா இந்த விஷயத்தை சொல்ல கிருபா இது என்னுடைய வீடு இந்த வீட்டில யார் இருக்கணும் இருக்கக்கூடாது என்பதை நான் தான் முடிவு பண்ணனும் என கொதிக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்து ரூமில் இருக்க அவள் கர்ணாவுக்கு நன்றி சொல்ல கருணா அப்படியே பேசிக் கொண்டு கட்டுதல் வந்து உட்கார இந்து அவனைத் திட்டி தரையில் படுக்க சொல்ல கர்ணா அப்செட் ஆகிறான்.
பிறகு பாண்டியிடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட இந்து மனதில் இருக்கும் காதலை வெளியே கொண்டு வர ஒரு பொண்ணால தான் முடியும்.. அவ பேரு சுகந்தி பிரியா, உங்க வீட்டுக்கு வருவா என்று சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
