தர்ஷினி சொன்ன விஷயம், ராவணனின் அடுத்த டார்க்கெட்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை வாங்கி தந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஜனனி. அதற்கு போராடுவதற்கு பதிலாக அவருக்கு வேறு வேறு பிரச்சனைகள் எல்லாம் வருகிறது, வழக்கும் திசைத்திருப்பப்படும் என தெரிகிறது.
குணசேகரன் ஆட்டமே இன்னும் முடியவில்லை அதற்குள் ராவணன் என்ற கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வந்து கதையே மாறிவிட்டது. முன்பு குணசேகரன் எல்லோரையும் ஆட்டி வைப்பார், இப்போது ராவணன் எல்லோரையும் ஆட்டி வைக்கிறார்.
மற்றபடி கதையில் நியாயம், தர்மம் எல்லாம் நிலைநாட்டவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசி, ராவணனுக்கு போன் செய்து அண்ணன்-தம்பிகள், ஜனனி எல்லாம் ஒன்று கூடுவார்கள் போல் தெரிகிறது என கூற ராவணன் அப்படி நடக்கக்கூடாது. அவர்கள் அடித்துக்கொள்வது போல் ஏதாவது செய் என்கிறார்.
அடுத்து தர்ஷினி தனது அப்பாவிடம் அவரவர் மாறினாலே பிரச்சனை தீரும் என கூற குணசேகரன் என்னை கூறுகிறாயா என கேட்கிறார்.
இதோ புரொமோ,
