இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
ரவி தேஜா பல வருடமாக ஒரு கம்பேக் படத்திற்காக காத்திருக்கிறார், அதன் காத்திருப்பாக வெளிவந்துள்ள இருமுடி ரவி தேஜாவுக்கு கம்பேக் கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
ரவி தேஜா வருடத்தில் சபரிமலைக்கு செல்ல விரதம் இருக்கும் 41 நாள் மட்டும் தான் குடிக்காமல் உள்ளார், மத்த எல்ல நாட்களும் குடியில் தான் இருக்கிறார், மகள் என்றால் உயிர்.
தன் மகள் மட்டுமின்றி ஊரில் எந்த பெண் பிள்ளைக்கு ஆபத்து என்றாலும் முதல் ஆளாக அவர் வந்து அடித்து வெளுக்கும் அளவிற்கு பெண் குழந்தைகள் என்றால் மிக அன்பாக இருப்பவர்.
அப்படி இருக்கும் அவர் ஊரில் 4 பேர் வந்து ஊரில் உள்ள பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு தொந்தரவு செய்கின்றனர், அவர்களையும் ரவிதேஜா அடித்து வெளுக்கிறார், அதோடு சபரிமலை விரதம் இருக்க போவதால் தன்னிடம் அடி வாங்கியவர்கள் இந்த 41 நாள் ஊருக்குள்ளேஏ வரகூடாது என சொல்ல, அதில் அந்த 4 பேர்களும் ரவி தேஜாவிடம் வந்து நாங்கள் எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் என சொல்லி செல்கிறார்கள்.
அப்படி சொல்லிவிட்டு அவர்கள் செல்லும் போது ஒருவனின் கண் ரவிதேஜா மகள் மீது விழ, பிறகு என்ன ஆனது ரவிதேஜாவிற்கு வரும் ஆபத்து என்ன என்ற பதட்டமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ரவிதேஜா நீண்ட வருடம் கழித்து தனக்கு என்ன வரும் என்பதை ரியலைஸ் செய்து நடித்துள்ளார், ப்ளீஸ் சார் இப்படியே இனி படம் நடிங்க, இன்னும் சிறு வயது பெண்களுடன் ஆட்டம் போடுவது, பாடுவது போன்றவற்றை விடுங்கள் இது தான் உங்கள் ரூட் என ரசிகர்களை சொல்ல வைத்துவிட்டார்.
படத்தில் பெண் குழந்தைகள், சிறுமிகள் பக்கத்து ஊருக்கு படிக்க செல்ல எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள், பள்ளி ஆசிரியையால் கூட பாதுகாப்பு இல்லை இந்த காலத்தில், அதற்கான வைக்கப்பட்ட காட்சி எல்லாம் பெற்றோர்கள் நெஞ்சில் இடி-யாக தான் இருக்கும்.
அதோடு பெற்றோர்கள் தைரியம் கொடுக்க வேண்டும், அவர்கள் பயந்து அமைதியாக போ என சொல்வது எவ்ளோ பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மிக தெளிவாக காட்டியுள்ளனர்.
ஆனால், படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது, அதோடு தெலுங்கு படங்களுக்கே உண்டான மாஸ் காட்சிகள் சேம் டெம்ப்ளேட்-ல் உள்ளது, ஸ்வாசிகா கதாபாத்திரம் கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு பதட்டம் தான்.
படத்தின் முதல் பாதி டீசண்ட் ஆக சென்றாலும், இரண்டாம் பாதி மிரட்டியுள்ளனர், டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் என பல திருப்பங்களுடன் இயக்குனர் சிவா நிவாரணா அவுட் ஆப் தி கிரவுண்ட் சிக்சர் தான்.
அதிலும் இந்த உலகத்தில் யாரை நம்புவது, யாரை நம்ப வேண்டாம் என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு இரண்டாம் பாதி முழுவதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்.
மேலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பு பதட்டம் அதிகம் என்பதால் பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது, கிளைமேக்ஸில் இவை அனைத்திற்கும் யார் இதெல்லாம் காரணம் என தெரிந்து ரவிதேஜா ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம் தான்.
டெக்னிக்கலாக ஜிவி பிரகாஷ் அய்யப்பன் சாமி பக்தர்கள் தாண்டி எல்லோரும் கொண்டாடும் ஆல்பத்தை கொடுத்துள்ளார், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே சிறப்பு.
க்ளாப்ஸ்
ரவிதேஜா அவர் மகள், ப்ரியா பவானி ஷங்கர் என படத்தில் நடித்த அனைவரும்.
படத்தின் இரண்டாம் பாதி
டெக்னிக்கல் ஒர்க்
டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மசாலா தன்மையை குறைத்து இருக்கலாம்.
