Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ்

Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ்


Essel குழுமம்

சென்னை, Essel குழுமம் தனது 100 ஆண்டு சாதனையை கொண்டாடும் வகையில், Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிக பிரம்மாண்டமான விழாவை நடத்தியது.

தமிழ் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழா, Essel குழுமத்தின் சிறப்பான நூற்றாண்டு பயணத்தை கொண்டாடும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ் | Essel Group Celebrates 100 Years Of Legacy



இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஆர்யா, விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பட பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அதேபோல் Zee தமிழ் குடும்பத்தின் நட்சத்திரங்களும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஏராளமான கலைஞர்களும் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய Essel குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Essel குழுமத்தின் நூற்றாண்டு பயணத்தை நினைவுகூர்ந்தார்.

பல்வேறு சவால்கள் மற்றும் மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இன்று உலகளாவிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக வளர்ந்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தனது தொழில் முனைவோர் பயணத்தை பகிர்ந்துகொண்ட அவர், 1970-ஆம் ஆண்டு வெறும் ரூ.17 முதலீட்டுடன் தொடங்கிய தனது கனவு, இன்று கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் ஊடக பேரரசாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்தினார்.

Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ் | Essel Group Celebrates 100 Years Of Legacy

1992-ஆம் ஆண்டு பிரத்யேக இந்தி Zee Tv-ல் 2 மணி நேரம் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இப்படி இரண்டு மணி நேர ஒளிபரப்புடன் தொடங்கிய Zee தமிழ், இன்று இந்தியாவிலும் உலகம் முழுவதும் பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்கும் முன்னணி ஊடக நிறுவனமாக திகழ்கிறது என்றும் கூறினார்.



தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது Zee நிறுவனத்திற்கு இருக்கும் ஆழமான மரியாதையை வலியுறுத்திய அவர், Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 ஆகியவை தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளையும் கதைகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார்.





விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், Essel குழுமத்தின் 100 ஆண்டு பயணம் மிகவும் பாராட்டத்தக்க சாதனை என்று கூறினார். “ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவது என்பது அதன் உறுதியையும், தொலைநோக்கு பார்வையையும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனையும் காட்டுகிறது,” என்றார்.

Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ் | Essel Group Celebrates 100 Years Of Legacy



மேலும், தொழில்நுட்பங்கள் எவ்வளவு மாறினாலும், நல்ல கதைகளுக்கான மக்களின் வரவேற்பு ஒருபோதும் குறையாது என்று தெரிவித்த அவர், இந்தியாவின் மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வலிமை கொண்டவை என்றும் கூறினார்.

இந்தியக் கதைகளை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் தானும் தொடர்ந்து பங்கெடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழா, Zee தமிழின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்காற்றிய பாட்னர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் மேடையாகவும் அமைந்தது.



மேலும் பிரசாந்த், ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படப் பிரபலங்களின் பங்கேற்பால் இந்த விழா நட்சத்திரங்கள் நிறைந்த சிறப்பான மாலையாக மாறியது.

இந்த நிகழ்வில் பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தொகுப்பாளர் ஆவுடையப்பன், நக்கீரன் கோபால் ஆகியோர் Zee தமிழ் தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியதை பற்றி உணர்வுபூர்வமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ் | Essel Group Celebrates 100 Years Of Legacy

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல வருடங்களாக Zee தமிழுடன் இணைந்து பயணித்து வரும் தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.

Essel குழுமத்தின் 100 ஆண்டு கொண்டாட்டம், அதன் பாரம்பரியம், புதுமை மற்றும் மக்களுடன் கொண்டுள்ள ஆழமான உறவை கொண்டாடியதுடன், இந்திய மற்றும் தமிழ் கதைகளை உலகளாவிய மேடைகளில் கொண்டு செல்லும் தனது உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியது.

Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 ஆகியவை இனியும் தரமான தமிழ் கதைகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்கி பார்வையாளர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *