2 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

2 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ்

லக்கி பாஸ்கர் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Vishwanath And Sons 2 Days Box Office

இந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் விஸ்வநாத் & சன்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. காதல், நகைச்சுவை, எமோஷன், உறவுகள் என பல விஷயங்களை உள்ளடக்கிய கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

2 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Vishwanath And Sons 2 Days Box Office

தமிழ்நாட்டில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 34 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Vishwanath And Sons 2 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *