ராவணனுக்கு செக் வைக்க அறிவுக்கரசி, ஷாக்கில் கதிர், நந்தினி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவரை அடக்கி அவர் செய்த தவறுகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து அவரது வீட்டுப் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் கதை அமையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் இரண்டாம் பாகம் தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாறாக கதையை அப்படியே மாற்றி மீண்டும் பழைய படி பெண்கள் அடிமையாகும்படியே கதையை கொண்டு செல்கிறார் இயக்குனர்.
ராவணன் என்ற வில்லன் குணசேகரன் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தையே அழிக்க வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், கதிரின் தொழில் திறப்பு விழாவிற்காக அனைவரும் கூறியுள்ளனர். அவ்வப்போது அங்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வருகிறது, ஆனால் பெரிதாக ஒன்றும் இல்லை.
திடீரென அறிவுக்கரசி என்ட்ரி கொடுக்க குடும்பமே ஷாக் ஆகிறார்கள். அப்போது வில்லத்தனம் செய்யும் ராவணனுக்கே செக் வைத்து திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
குணசேகரன் அறிவுக்கரசியும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என கூறியது நந்தினிக்கு கடும் ஷாக்கை கொடுத்துள்ளது.






