செல்பி கூட எடுக்க மாட்டேன்.. நடிகர் நாகர்ஜுனாவுக்கு இப்படி ஒரு பயமா! அதிர்ச்சி விஷயம்

செல்பி கூட எடுக்க மாட்டேன்.. நடிகர் நாகர்ஜுனாவுக்கு இப்படி ஒரு பயமா! அதிர்ச்சி விஷயம்

நடிகர் நாகர்ஜுனா தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.

நாகர்ஜுனா சமீபத்தில் நடந்த சைபர் க்ரைம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் சைபர் க்ரைமால் பாதிக்கப்பட்டது பற்றி கூறினார்.’

செல்பி கூட எடுக்க மாட்டேன்.. நடிகர் நாகர்ஜுனாவுக்கு இப்படி ஒரு பயமா! அதிர்ச்சி விஷயம் | Nagarjuna Change Phone Password Every Week

பயம்

நான்கு வருடங்களுக்கு முன்பு வங்கி ஊழியர் போல ஒருவர் பேசி தன்னை ஒருவர் ஏமாற்றியதாக கூறினார். 1977ல் தான் என்ஜினியரிங் படிக்கும்போது இருந்தே தனது ஆசிரியர்கள் இப்படி மோசடி செய்பவர்கள் பற்றி எச்சரித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

“எனக்கு தெரிந்தவர்களே பலரும் டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை தடுக்க போலீசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.”

“என்னுடைய போன் பாஸ்வர்டை நான் வாரத்திற்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். Wi-Fi passwordஐ மாதத்திற்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். போனில் செல்பி கூட எடுக்கமாட்டேன்” எனவும் நாகர்ஜூனா கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *