அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் சிந்துபைரவி சீரியல்…

சிந்துபைரவி
சிந்து-பைரவி இரண்டு சகோதரிகளை மையமாக கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது சிந்து பைரவி சீரியல்.
ஆசைப்பட்டவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சிந்து, தன்னை பிடிக்கவில்லை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று பைரவி கூறியும் அவரை கட்டாயப்படுத்தி ஆறுமுகம் திருமணம் செய்கிறார்.
திருமணம் செய்தாலும் மனதால் இணையாத இந்த இரண்டு ஜோடிகளின் கதையாக சிந்து பைரவி கதை இருந்தது.
கிளைமேக்ஸ்
கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 14 முடிவுக்கு வந்துவிட்டது.
அன்னபூரணி மனப்பூர்வமாக சிந்துவை ஏற்றுக்கொண்டு சிவாவுடன் சேர்த்து வைக்கிறார். அதேபோல் ஆறுமுகம்-பைரவியும் மனதார இணைகிறார்கள், அதோடு சிந்து பைரவி சீரியல் முடிவுக்கு வருகிறது. 410 எபிசோடுகளுடன் சுபம் போட்டு தொடரை முடித்துள்ளனர்.






