China siru kiliye today episode review

சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சின்னஞ்சிறு கிளியே’ சீரியல், Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு* ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் இந்த தொடரில், நேற்றைய எபிசோடில் திவாகரன் கொடுத்த ஜூஸ் மீது இந்துவுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிரடி சம்பவங்கள் அரங்கேற உள்ளன.
தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை உறுதி செய்ய இந்து, செல்விக்கு போன் செய்து விஷயத்தை தெரிவிக்கிறாள். பின்னர் அந்த ஜூஸை எடுத்துக்கொண்டு தனது தோழி பணிபுரியும் லேப்புக்கு சென்று பரிசோதனை செய்ய சொல்கிறாள். சோதனை முடிவில் அந்த ஜூஸில் கருவைக் கலைப்பதற்கான மருந்து கலக்கப்பட்டிருந்தது.தெரிய வர, இந்து கடும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்கிறாள்.
உண்மை தெரிந்தவுடன் நேராக வீட்டிற்கு கிளம்புகிறாள்.
ஆனால் வீட்டில் காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி. இந்து, போலீஸாருடன் வீட்டுக்குள் நுழைவதை பார்த்த திவாகரனும் விஷ்வாவும் பதறிப் போகின்றனர்.
தங்களது சதி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதோ என்ற பயத்தில் இருவரும் கதி கலங்கி நிற்கின்றனர். ஆனால் அந்த போலீஸ் அதிகாரி, “நான் இந்த ஏரியாவுக்கு புதிதாக வந்திருக்கேன். வீடு பார்த்து தருவீங்கன்னு சொன்னாங்க, அதான் கேட்க வந்தேன்” என்று கூறிவிட்டு சாதாரணமாக கிளம்பிச் செல்கிறார்.
இதனால் திவாகரனும் விஷ்வாவும் நிம்மதி அடைந்தாலும், அவர்களை விடாமல் இந்து கிண்டல் செய்கிறாள்.
வழுக்கும் சந்தேகம்
உங்களுக்கு இவ்வளவு பயமா? அடுத்த தடவை திட்டம் போடும்போது சொல்லுங்க… நானே ஒரு நல்ல பிளானை சொல்லித் தர்றேன்!” என்று நக்கலாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறாள்.
மறுபக்கம், கிருபாவுக்கு இந்துவின் கர்ப்பம் குறித்த சந்தேகம் எழுகிறது. உடனே கர்ணாவை தொடர்புகொண்டு உண்மையை விசாரிக்கிறார். அப்போது கர்ணா, “அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்று உண்மையை கூறிவிடுகிறார். இதைக் கேட்ட கிருபா, எந்த விஷயத்தையும் செய்வதற்கு முன்பு அதன் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று திவாகரனையும் விஷ்வாவையும் கடுமையாக கண்டிக்கிறார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் திவாகரன் மற்றும் விஷ்வாவின் கோபத்தை மேலும் தூண்டுகின்றன. இந்துவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் அடுத்த கட்ட திட்டத்தை தீட்டத் தொடங்குகின்றனர்.
இந்து கண்டுபிடித்த உண்மை என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? திவாகரன் – விஷ்வா கூட்டணி அடுத்து என்ன செய்யப் போகிறது? இந்துவின் பதிலடி எப்படி இருக்கும்?* என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை காண, *சின்னஞ்சிறு கிளியே* தொடரின் அடுத்த எபிசோடை தவறாமல் பாருங்கள்!






