பிக் பாஸ் ஷோவில் யாரும் எதிர்பார்காத ட்விஸ்ட்.. இந்த வருடம் வரும் பெரிய மாற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் இந்த ஷோ நடைபெற்ற வருகிறது.
விரைவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் பிக் பாஸ் ஷோவை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மாற்றம்
ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பிக் பாஸ் இருபதாவது சீசன் தொடங்குகிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய ட்விஸ்ட் ஒன்று வந்திருக்கிறது. அது என்னவென்றால் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனதும் உடனே வீட்டுக்கு நேரடியாக அனுப்பி விட மாட்டார்களாம்.
அவர்களை இரண்டாவதாக ஒரு வீட்டில் வைத்து, அங்கு மேலும் போட்டிகள் நடக்கும், அதில் ஜெயிப்பவர்கள் மீண்டும் மெயின் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்களாம்.
இப்படி பிக்பாஸ் ஷோவில் புதிய மாற்றம் வர இருப்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






