அதிகாலை, விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்… பரபரப்பு தகவல்

ஏ.ஆர்.ரகுமான்
இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான்.
இவரது மகன் ஏ.ஆர்.அமீனும் இசைத்துறையில் களமிறங்கி தனது அப்பாவுடன் பயணித்து வருகிறார். இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை 3.30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்றிருக்கிறார்.
அப்போது ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருவே ரேபிடோ வேகன்-ஆர் வாகனம் மீது அமீனின் கார் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அமீன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.






