சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு..

தமிழ்நாட்டின் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  

ரஜினிகாந்த்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் எங்கு சென்றாலும் இவருக்கென்றே தனி மரியாதை கிடைக்கும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.. | Minister Vanni Arasu Meets Superstar Rajinikanth

இவர் நடிப்பில் அடுத்து ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.. | Minister Vanni Arasu Meets Superstar Rajinikanth

ஜெயிலர் 2-வை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷி கண்ணா, சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமைச்சர் வன்னி அரசு

இந்நிலையில், இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார். அந்த இனிய தருணத்தில் எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வன்னி அரசு பதிவு செய்திருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.. | Minister Vanni Arasu Meets Superstar Rajinikanth

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரை உலகின் சூப்பர்ஸ்டார் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ‘நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்’ என வாழ்த்தி அனுப்பினார்” என பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *