பிக்பாஸ் 10வது சீசனில் இந்த பிரபல சீரியல் நடிகையா?…

பிக்பாஸ் 10வது சீசனில் இந்த பிரபல சீரியல் நடிகையா?…


பிக்பாஸ் 

கடந்த 2017ம் ஆண்டு தமிழக மக்களுக்கு என்ன நிகழ்ச்சி என்றே புரியாமல் துவங்கப்பட்டது தான் பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்க 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள முதல் சீசன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மக்களுக்கு இந்த ஷோ குறித்து எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை, ஆனால் முடியும் நேரத்தில் இன்னும் சீசன் செல்லக்கூடாதா என ஏங்கிய ரசிகர்கள் உள்ளார்கள். முதல் சீசனை தொடர்ந்து அடுத்தடுத்து 9 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.

முதல் சீசன் முதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இடையில் பிக்பாஸில் இருந்து வெளியேற விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல சீரியல் நடிகையா?... சமூக வலைதளத்தில் கசிந்த தகவல் | Is Serial Actress Confirm In Bigg Boss 10

10வது சீசன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 10வது சீசன் குறித்த புரொமோக்கள் விஜய் சேதுபதி இடம்பெற ஒளிபரப்பானது. இந்த 10வது சீசனில் என்ன ஸ்பெஷல் என்றால் பிரபலங்களை தாண்டி சாதாரண மக்களும் கலந்துகொள்ளலாம் என்பது தான். 

வரும் செப்டம்பர் மாதம் முதல் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்படும் நிலையில் இதில் பங்குபெறும் ஒரு சீரியல் நடிகை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான வில்லியாக மாறிய நடிகை பரீனா 10வது சீசனில் கலந்துகொள்வது உறுதி என்பது போல் செய்திகள் வலம் வருகின்றன.

பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல சீரியல் நடிகையா?... சமூக வலைதளத்தில் கசிந்த தகவல் | Is Serial Actress Confirm In Bigg Boss 10


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *