அழகு என்றால் என்ன? அழகை பற்றி மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

ராஷ்மிகா மந்தனா
பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த காக்டெய்ல் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக இவர் நடிப்பில் Mysaa மற்றும் ரணபலி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ரணபலி திரைப்படத்தில் தனது கணவர் விஜய் தேவரகொண்டாவோடு இணைந்து நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
அழகு என்றால் என்ன?
முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, அழகு குறித்து எழுந்த கேள்விக்கு அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அவர் கூறியதாவது, “உள்ளம் அழகினால் உடலும் அழகாகும்; விதவிதமான ஆடைகள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும், ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாக தெரிவோம். முடிந்தவரை நல்லது செய்து வாழ்வோம்; அதுதான் நம் காலத்திற்கு பிறகும் நம்மை பேச வைக்கும்” என தெரிவித்துள்ளார்.






