ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா… தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகை சமந்தா
நோய் வந்தால் என்ன, பிரச்சனை வந்தால் என்ன அதையெல்லாம் போராடி எனது கனவை நோக்கி பயணிப்பேன் என ரசிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்தவர் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பதில்லை. கடைசியாக தெலுங்கில் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்தார், தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது.
சோலோ நாயகியாக சமந்தா நடித்த படங்கள் அனைத்துமே ஹிட், அதேபோல் இந்த படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டாகியுள்ளது.
வாடகை
படத்தின் வெற்றியை முடித்த கையோடு நடிகை சமந்தா கணவருடன் தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.
தாய்லாந்தில் அவர்கள் ஓய்வெடுப்பதற்காக தங்கியிருக்கும் ரெசார்ட்டின் வாடகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பேரும் சென்றிருப்பது மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் வெல்னஸ் ரெசார்ட்டாம்.
அங்கே இரண்டு இரவுகள் தங்க ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வாடகையாம். அங்கே சவுட்ன் தெரபி, உடற்பயிற்சி, கடற்கரை காட்சிகள் என பல விஷயங்கள் இருக்குமாம்.






