நடேசனுக்கு இப்படியொரு பிரச்சனை, வருந்தும் நிலா… அய்யனார் துணை எபிசோட்

நடேசனுக்கு இப்படியொரு பிரச்சனை, வருந்தும் நிலா… அய்யனார் துணை எபிசோட்

அய்யனார் துணை

ஆசை ஆசையாக டிவி வாங்கலாம் என இருந்த குடும்பத்தினருக்கு கடன் காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தது மிகவும் மன வருத்தத்தை கொடுத்துள்ளது.

ஆனால் இதையெல்லாம் பொறுட்படுத்தாமல் ஜாலியாக வழக்கம் போல் பாட்டுபாடி வந்த நடேசன் மீது பாண்டி தனது கோபத்தை காட்டினார்.

அப்போது சேரன், முதன்முறையாக தனது அப்பாவை கேள்வி மேல் கேள்வி கோபமாக கேட்டுவிட்டார். எங்களுக்காக என்ன செய்தீர்கள், வீணா போன அந்த வண்டி வாங்க நாங்கள் EMI கட்டனுமா, இந்த வீட்டிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்.

இந்த வீட்டிற்கு வந்த பாவத்திற்காக அந்த பெண் சிறுக சிறுக பணம் சேர்த்து டிவி வாங்கலாம் என்றது. ஆனால் அந்த சந்தோஷம் 5 நிமிடம் கூட இல்லை உங்களால் அது எல்லாம் அப்படியே போச்சு.

எப்போது பாரு உங்கள் வீடு என்பீர்கள், நாங்கள் வெளியே போகிறோம் நீஙகள் நிம்மதியாக இருங்கள் என கோபமாக பேசுகிறார்.
சேரன்-பல்லவன் சந்தாவை பார்க்க இராமேஸ்வரம் செல்கிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த நிலாவிடம் நடேசன் போய் சமாதானமாக பேசுகிறார். நான் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை, நான் தரேன் என்று தான் கூறினேன் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. குடியால் தான் இப்படி ஆனது விட்டுவிடுகிறேன் என்கிறார், ஆனால் நிலா நம்பவில்லை.

நடேசன், குடியை உடனே நிறுத்த முடியாது, எத்தனை வருட பழக்கம் உடனே நிறுத்தினால் உடம்பிற்கு ஏதாவது ஆகிவிடும் என்கிறார்.
அவரின் பேச்சை கேட்ட நிலா, சோழனிடம் ஒரு வேளை அவருக்கு குடிப்பழக்கம் நிறுத்த முடியாமல் கஷ்டப்படுகிறாரோ என கேட்கிறார்.

சோழன் அவரைப்பற்றி கவலைப்படுவதை நிறத்திவிட்டு உனக்கு இருக்கும் வேலைகளை பார் என கூறிவிட்டு செல்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *