ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம்

ஜெயிலர் 2

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் | Jailer 2 Movie Audio Launch Update

இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், மிர்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 15-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இசை வெளியீட்டு விழா

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் | Jailer 2 Movie Audio Launch Update

இதற்கு முன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *