காதல் காதல் காதல் சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்த நடிகை… யார் அவர் தெரியுமா?

காதல் காதல் காதல்
ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக இருக்கும் விஜய் டிவியில் அடுத்தடுத்து நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் கனா கண்டேனடி, மகாநதி போன்ற சீரியல்கள் திடீரென முடிவுக்கு வந்தது. ஒன்று தொடங்கப்பட்டு சில மாதங்களே ஆன தொடர், இன்னொன்று ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்த சீரியல், இப்போது முடிந்துவிட்டது.
இதனால் உடனே விஜய் டிவி புதிய சீரியலை களமிறக்கினார்கள், காதல் காதல் காதல் என்ற தொடர் தான்.
நியூ என்ட்ரி
3 காதல் கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமி மகன் அன்பு, மலையாள சின்னத்திரை நடிகர் நலீப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.
முத்தழகு சீரியல் புகழ் ஷோபனா, தங்கமகள் சீரியல் நடிகை மனுஸ்ரீ ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
தற்போது இந்த தொடரில் புதிய என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சுசித்ரா, இவர் அருண் பிரசாத் ஜோடி என கூறப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் இவர் என்ட்ரி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






