நிலா – சோழன் ஹனிமூன் ரொமான்ஸ்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ

நிலா – சோழன் ஹனிமூன் ரொமான்ஸ்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ


அய்யனார் துணை

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் கடந்த வாரம் நிலா தன்னை ஹனிமூனுக்கு அழைத்து செல்லும்படி சோழனிடம் கேட்டார். உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை சோழன் செய்தார்.

ஆனால், ட்விஸ்ட் தரும் வகையில் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து செல்லலாம் என நிலா கூறினார்.

இதை கேட்டு ஷாக்கான சோழன், ‘நாம் இருவர் மட்டும் சென்றால் தான் அது ஹனிமூன், குடும்பத்தோடு சென்றால் அது எப்படி ஹனிமூன் ஆகும்?’ என நிலாவிடம் கேட்டார். ஆனால், எப்படியோ சோழனை அதற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்.

நிலா – சோழன் ஹனிமூன்

இந்த நிலையில், வரும் வாரம் அய்யனார் துணை சீரியலில் நடக்கவிருப்பது குறித்து புரோமோ வெளியாகியுள்ளது. இதில், ‘இந்த சோழன் எப்படிப்பட்ட ஒரு காதல் மன்னன் என்பதை நீ பார்ப்பாய்’ என நிலா கூறுகிறார்.

இருவரும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது.

அதன்பின், மலையின் உச்சியில் இருந்து ‘நிலா, I Love You’ என சோழன் கத்த, அதன்பின், ‘சோழன், I Love You’ என நிலா கத்துகிறார். நிலா தன்னிடம் I Love You என சொன்னவுடன் கண்கலங்குகிறார் சோழன். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *