ஜனனியை சிக்க வைக்க பிளான் போட்ட ராணா, வெளுத்து வாங்கிய சக்தி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

எதிர்நீச்சல் தொடர்கிறது
யப்பா கொஞ்சம் நிறுத்துங்கள், கதை எதை நோக்கி பயணிக்கிறது கொஞ்சம் சொல்லிட்டு கதையை நகர்த்துங்கள் என எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
பெண்களுக்கான கதை, பெண்கள் எழுச்சி பற்றிய கதை எல்லாம் சொன்ன இயக்குனர் இப்போது மாறிவிட்டாரா என கேள்வி எழுப்புகிறார்கள். முன்பெல்லாம் குணசேகரன் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்த திட்டம் போட பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்கும் கதையாக இருந்தது.
ஆனால் இப்போது எதை நோக்கி கதை போகிறது என்பதே தெரியவில்லை, ரசிகர்களே மிகவும் குழம்பி போய்யுள்ளனர். வில்லனிசத்திற்கு இன்னொரு அடையாளமாக ராணா வந்துள்ளார், அதைத்தாண்டி கதையில் வேறு எதுவும் இல்லை என்ற விமர்சனங்கள் வருகின்றன.
புரொமோ
ஜனனியை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என ராணா என்னென்னமோ செய்கிறார். நேற்றைய எபிசோடில், ஜனனி மீது வழக்கு உள்ளது, கண்டிப்பாக அவர் இன்று கைதாகிவிடுவார் என ராணா கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் ஜனனியை விசாரிக்க போலீஸ் வீட்டிற்கு வர அவரை அந்த காட்டிற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு போலீசார் எங்கே இறந்தவரின் உடல் காணவில்லை என கூற சக்தி போலீசாரை எங்களை கேட்டால் எப்படி தெரியும்.
நீங்கள் ஒருபக்கமாகவே வழக்கை விசாரிக்கிறீர்கள், எங்களுக்கு ராணா மீது சந்தேகம் உள்ளது என்கிறோம், நீங்கள் அதைப்பற்றி கேட்கவே செய்யவில்லை என அடுத்தடுத்து கேள்வி கேட்டு மடக்குகிறார்.






