இது மிக அருவருப்பான கேள்வி.. கடும் கோபமான நடிகை ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவர் அடிக்கடி வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில் இன்று ஏர்போர்ட்டில் இருக்கும்போது ஃபிரீ டைமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் பதில் அளித்தார்.
அருவருப்பான கேள்வி
உங்க போன் வால்பேப்பர் என்ன, புடவை கட்ட தெரியுமா?, அடுத்த ஜென்மம் நம்பிக்கை இருக்கா.. என பல வித்தியாசமான கேள்விகளுக்கும் அவர் பதில் கொடுத்தார்.
ஒரு நபர் “உங்களுக்கு பிடித்த adhesive tape பிராண்ட் என்ன?” என கேட்க, ஸ்ருதி ஹாசன் “மிக அருவருப்பான கேள்வி, Bye” என பதில் கொடுத்திருக்கிறார்.






