பிளாஸ்ட பட இயக்குனரின் அடுத்த படம்.. டாப் ஹீரோவுடன் இணைகிறாரா?

சமீபத்தில் ரிலீஸ் ஆகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த படம் பிளாஸ்ட். ஓடிடி-யில் வெளியான நிலையில் அதிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
பிளாஸ்ட் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே ராஜ் அடுத்து பல முக்கிய ஹீரோக்கள் உடன் இணைய பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வர தொடங்கி இருக்கிறது.
விக்ரம்
இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் உடன் சுபாஷ் தற்போது பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
மேலும் ஏற்கனவே கார்த்தி உடனே சுபாஷ் கே ராஜ் கூட்டணி சேர உள்ளதாக ஒரு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் பிளாஸ்ட் இயக்குனருக்கு பல பெரிய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்திருப்பது உறுதி ஆகி உள்ளது.






