திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனா, கோமதியின் அதிரடி முடிவு… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் விரைவில் திருமண விசேஷம் நிகழும் என தெரிகிறது. யாருடைய திருமணம் என்றால் குமாருக்கு தான்.
நேற்றைய எபிசோடில், மயில் அப்பா தனது இரண்டாவது மகளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என தெரியவில்லை, முதல் மகள் வீட்டில் இருக்கும் போது அவளுக்கு திருமணம் நடக்குமா என தெரியவில்லை.
அவளை பற்றிய கவலை தான் எங்கள் இருக்கும் என தனது நண்பரிடம் கூறிக்கொண்டிருக்க சக்திவேல் அதைக் கேட்கிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சூட்டோடு சூடாக மயில் அப்பா புலம்பியதை கேட்ட சக்திவேல் அவர்களது வீட்டிற்கு செல்கிறார்.
தனது மகன் குமாருக்காக பெண் கேட்கிறார், அவர் கூறியதை கேட்டு முதலில் பயந்த மயில் அம்மா-அப்பா கடைசியில் ஒப்புக்கொள்கிறார்கள். மயிலின் அம்மா-அப்பா சக்திவேலிடம் இந்த கல்யாணத்திற்கு எங்களுக்கு சம்மதம் என கூற சக்திவேல் அடுத்த வேலையை கவனிக்கிறார்.
இன்னொரு பக்கம், மீனா தனது அலுவலகத்தில் திடீரென மயக்கம் போட்டு விழுகிறார், அவருடன் வேலை பார்ப்பவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு செந்திலுக்கு போன் செய்கின்றனர். சாப்பிடாமல், தூங்காமல் இருந்ததால் அவருக்கு பிபி, சுகர் எல்லாம் குறைந்ததால் மயக்கம் அடைந்துவிட்டார் என்கிறார்கள்.
செந்தில் என்ன ஆனது என மீனாவிடம் கேட்க அவரோ பேசாமல் முகத்தை திருப்பிக் கொள்கிறார். பின் செந்தில் கோமதிக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூற உடனே பதறியடித்து மருத்துவமனைக்கு வருகிறார்.
மீனாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு எடுக்கிறார். ஆனால் மீனா அம்மா எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றும் செந்தில் வேண்டாம் எங்கள் வீட்டிற்கே செல்கிறோம் என்கிறார். கடைசியில் மீனாவே முடிவு எடுக்கட்டும் என எல்லோரும் அவரை கேட்கிறார்.
மீனாவின் முடிவு என்ன என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.






