படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது… இத்தனை கோடியா?

விஜய் சேதுபதி
சில இயக்குனர்களின் படங்கள் எப்போதுமே ரசிகர்களிடம் ஸ்பெஷல் வரவேற்பு பெறும், அப்படி ஒரு இயக்குனர் தான் மணிரத்னம்.
இவரது இயக்கத்தில் யாராலும் இதை படம் எடுக்க முடியாது என பரவலாக பேசப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து சாதித்தார்.
இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளியானதை அடுத்து மணிரத்னம் கமல்ஹாசனை வைத்து தக் லைப் என்ற படத்தை இயக்கி இருந்தார், ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு செல்லவில்லை.
வியாபாரம்
அடுத்து மணிரத்னம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து ஒரு புதிய படம் இயக்க உள்ளார். வரும் ஜுலை மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, அதற்குள்ளேயே படத்தின் வியாபாரம் செம மாஸாக முடிந்துள்ளது.
நெட்பிளிக்ஸ் இப்படத்தை ரூ. 20 கோடிக்கு வாங்கியுள்ளனர், ஓவர்சீஸ் ரைட்ஸ் Home Screen Entertainment ரூ. 8 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.
அடுத்து ஆடியோ ரைட்ஸ் ரூ. 15 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை அதற்குள் படம் ரூ. 43 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.






