கருப்பு படத்தின் இறுதி வசூல்.. அதிகாரப்பூர்வமாக வந்த வசூல் விவரம்

ஆர்ஜே பாலாஜி மற்றும் சூர்யாவின் கூட்டணியில் வந்த கருப்பு படம் மிகப்பெரிய ஹிட் ஆகி நல்ல வசூலை குவித்து இருக்கிறது.
பல வருடங்களுக்கு பின் சூர்யா கெரியரில் இது மிகப்பெரிய ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வசூல்
ஏழு வாரங்களை கடந்து இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கருப்பு படம் பெற்று இருக்கும் மொத்த வசூல் எவ்வளவு என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
இதுவரை 191 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் கிராஸ் வசூல் வந்திருக்கிறதாம். மேலும் இன்னும் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






