எங்கள் தங்கம் திரை விமர்சனம்

எங்கள் தங்கம் திரை விமர்சனம்


தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக ஹீரோயின்களை முதன்மை கதாபாத்திரமாக வைத்து பல படங்கள் வந்துள்ளது, ஆனால், இதில் முதன் முறையாக ஒரு பாட்ஷா படம் போல் மாஸ் ஆக்‌ஷன் படமாக நந்தினி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்துள்ள இந்த எங்கள் தங்கம் எப்படியுள்ளது? பார்ப்போம். 

கதைக்களம்

சமந்தா தன் கணவருடன்(திகந்த்) அவருடைய ஊருக்கு வருகிறார். 3 வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து சமந்தாவுடன் வாழ்ந்து வந்தவர் தன் அப்பா-அம்மாவை சமதானப்படுத்தவும், அப்படியே தான் தங்கை திருமணத்துகாகவும் சமந்தாவை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு திகந்த் வருகிறார்.

எங்கள் தங்கம் திரை விமர்சனம் | Engal Thangam Movie Review

அங்கு வந்த இடத்தில் சமந்தாவால் அந்த குடும்பத்தினருடன் ஒன்றாக பயன்ப்பட முடியவில்லை, மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கும் குடும்பத்தில், தன் கணவருகாகவும் அவர் தன் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்பதற்காக சமந்தாவும் அந்த குடும்பத்திற்கு ஏற்றது போல் மாறுகிறார்.

அந்த தருணத்தில் ஒருவர் சமந்தாவை பின் தொடர்ந்து, நீ ஜான்சி தானே என கேட்க, சமந்தாவோ கொஞ்சம் பதட்டத்துடன் அங்கிருந்து நகர்கிறார். பின்தொடர்ந்து வந்தவர் ஜெயிலில் இருக்கும் கர்ணா என்பவரிடம் தான் ஜான்சியை பார்த்ததாக சொல்கிறார்.

எங்கள் தங்கம் திரை விமர்சனம் | Engal Thangam Movie Review

பிறகு கர்ணாவும் ஜான்சியை தேடி தர, அந்த இந்த கர்ணா, சமந்தா ஏன் மறைந்து வாழ்கிறார், கர்ணாவுக்கும், சமந்தாவுக்கும் என்ன பிரச்சனை, எப்படி தீர்ந்தது இது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்


சமந்தா சாதுவான பெண்ணாக வந்து, ஆக்‌ஷன் சீன்களில் அதிரடி கிளப்புகிறார், அதிலும் தன் கணவரின் தம்பி மனைவியை விட தான் சிறந்த மருமகள் என காண்பிக்க அவர் செய்யும் வேலைகள் செம கலாட்டா அதே நேரத்தில் தன் பின் தொடர்ந்து வருபவரை அடிக்கும் இடத்தில் காட்டும் ட்ரான்பர்மேஷன் என கலக்கியுள்ளார்.

எங்கள் தங்கம் திரை விமர்சனம் | Engal Thangam Movie Review

படத்தின் முதல் பாதி ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் சமந்தா குறித்த புதிர்கள் உடையும் இடத்திலிருந்து இடைவேளை வரை நன்றாகவே செல்கிறது, அதிலும் சமந்தா தன் தோழியுடன் இறந்த ஒருவரை மறைக்கும் காட்சி கலகலப்புடன் பதட்டத்தையும் காட்டியுள்ளனர்.

இடைவேளையில் கர்ணா Vs ஜான்சி என கதை நகரும் இடத்தில் ஒரு ஹை மொமண்ட் வந்தாலும், அதன் பிறகு இது தானே நடக்கும் என்கிற அடுத்தடுத்து யூகிக்க கூடிய திரைக்கதை கொஞ்சம் சறுக்கல், ஆனாலும், சமந்தா ஆக்‌ஷன் காட்சிகள் அதை ஈடுகட்டுகிறது.

எங்கள் தங்கம் திரை விமர்சனம் | Engal Thangam Movie Review

அதிலும் சமந்தா மற்றும் அவர் குடும்பத்துக்கு கர்ணா மட்டுமில்லாமல், ஊரில் ஒரு அரசியல்வாதி மூலமாகவும் பிரச்சனை என வருவது சுவாரஸ்யம் நிறைந்த களம் என்றாலும் ஆக்‌ஷனில் காட்டிய வித்தையை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம், அதிலும் வில்லன் கதாபாத்திரமாக கர்ணா டிப்பிக்கள் வில்லனாகவே வந்து செல்கிறார்.

இரண்டாம் பாதியில் சமந்தா வீட்டு விசேஷத்திற்கு வந்து அவரை மிரட்டும் இடத்தில் மட்டும் கவனம் ஈர்க்கிறது கர்ணா கதாபாத்திரம்.

எங்கள் தங்கம் திரை விமர்சனம் | Engal Thangam Movie Review

டெக்னிக்கலாக சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மாஸ் காட்சிகளை நன்றாக எலிவேட் செய்தாலும் எதோ ஒன்று மிஸ்ஸிங் என்பதே போலவே இருந்தது, ஒளிப்பதிவு, ஸ்டெண்ட் காட்சிகள் பிரமாதம்.

க்ளாப்ஸ்


சமந்தா தூள் கிளப்பியுள்ளார்.


சண்டை காட்சிகள் அதிலும் பஸ் ஸ்டெண்ட் மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி.


படத்தின் முதல் பாதி


பல்ப்ஸ்



பெரிய திருப்பதை ஏற்படுத்ததாத ப்ளாஷ்பேக்


இரண்டாம் பாதி திரைக்கதை மிகவும் யூகிக்கும்படி இருப்பது.



மொத்தத்தில் எங்கள் தங்கள் தூக்கி கொண்டாட முடியவில்லை என்றாலும், தங்கத்தை ஒதுக்கவும் முடியாது அல்லவா…

 

எங்கள் தங்கம் திரை விமர்சனம் | Engal Thangam Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *