ரேகாவை கண்டுபிடிக்க சிந்தாமணி போட்ட பிளானில் சிக்கி நபர், முத்து செய்யப்போவது என்ன?… சிறகடிக்க ஆசை சீரியல்

ரேகாவை கண்டுபிடிக்க சிந்தாமணி போட்ட பிளானில் சிக்கி நபர், முத்து செய்யப்போவது என்ன?… சிறகடிக்க ஆசை சீரியல்


சிறகடிக்க ஆசை

தனது அம்மா-அப்பாவால் வீட்டிற்குள்ளே முடக்கப்பட்ட ரேகா எப்படியோ தப்பித்து முத்துவின் பாட்டி வீட்டில் பாதுகாப்பாக சத்யாவுடன் இருக்கிறார்.

தனது மகளை கடத்திவிட்டார்கள் என அறிந்துகொண்ட சிந்தாமணி அண்ணாமலை வீட்டிற்கு வந்து குடும்பத்தை மிரட்டினார், ஆனால் அனைவரும் அவருக்கு பதிலடி கொடுத்து அனுப்பினார்கள்.

ரேகாவை கண்டுபிடிக்க சிந்தாமணி போட்ட பிளானில் சிக்கி நபர், முத்து செய்யப்போவது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial June 19 Episode

எபிசோட்


இன்றைய எபிசோடில், முத்து-மீனா ஆங்கிலப் பயிற்சியுடன் தொடங்குகிறது. அதில் மிஷ்ரா-ஸ்வேதா இடையேயான லவ் டிராக் இனி வரும் என்பது உறுதியாக தெரிகிறது.
அடுத்த சிந்தாமணி தனது விட்டிற்கு போலீஸை அழைத்துவந்து முத்து-மீனா தான் தனது மகளை கடத்தினார்கள் என்ற கூறுகிறார்.

அதேபோல் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோவில் முத்து, மீனா, சத்யா இருப்பது தெரியவர அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசிடம் கூறுகிறார் சிந்தாமணி.

ரேகாவை கண்டுபிடிக்க சிந்தாமணி போட்ட பிளானில் சிக்கி நபர், முத்து செய்யப்போவது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial June 19 Episode

போலீஸ் கண்டிப்பாக கைது செய்கிறேன் என கிளம்ப அந்த நேரத்தில் சிந்தாமணிக்கு போனில் ஒரு வீடியோ வருகிறது. அதில், ரேகா என்னை நீங்கள் தேட வேண்டாம், நான் நன்றாக தான் இருக்கிறேன்.

என்னை யாரும் கடத்தவில்லை, அப்படி நீங்கள் யார் மீதாவது பழி போட்டால் நானே வந்து பேசுவேன் என்கிறார். அந்த வீடியோவை கேட்ட சிந்தாமணி, நியாயமாக செல்ல முத்து விடவில்லை, இனி நான் என் ரூட்டில் செல்கிறேன் என கிளம்புகிறார்.


பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மீனாவின் அம்மா யாரோ இருவர் வீட்டிற்கு அருகே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள், சத்யா வீட்டில் இல்லை பயமாக இருக்கிறது என்கிறார். அதற்கு மீனா பயப்படாதே சிந்தாமணி வேலையாக தான் இருக்கும் என்கிறார்.

பார்வதி வீட்டிற்கு சென்று நடந்த விஷயத்தை கூறி அம்மா இங்கே இருக்கட்டுமா என்கிறார், அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை நாளை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *