தணிக்கை சான்றிதழ் பெற ஏற்பாடு தீவிரம், விரைவில் விஜய்யின் ஜனநாயகன்… ரிலீஸ் எப்போது?

ஜனநாயகன்
இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக மாஸாக ஒரு படம் வெளியாக இருந்தது, ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. என்ன படம், அப்படம் ரிலீஸ் ஆனால் எப்படி தமிழ்நாடு இருந்திருக்கும் என்று நினைத்தாலே செம கொண்டாட்டமாக உள்ளது.
வேறு என்ன படம் தமிழ் சினிமாவின் மாஸ் நாயகன் விஜய்யின் ஜனநாயகன் படம் தான் ரிலீஸ் ஆக இருந்தது, அவரது கடைசிப்படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பேரதிர்ச்சியாக ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை.
இது தளபதி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது, ஆனாலும் விஜய்யின் அரசியல் என்ட்ரி அந்த நேரத்தில் வந்ததால் ரசிகர்கள் அங்கே தளபதியை கொண்டாட ஆரம்பித்தார்கள். அவரை இப்போது தமிழ்நாடு முதலமைச்சராகவும் ஆக்கியுள்ளனர்.
ரிலீஸ்
தளபதி விஜய்யை தமிழக முதலமைச்சராக மக்கள் கொண்டாடி வரும் நிலையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது டெல்லியில் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறும் வேலையில் ஜனநாயகன் படக்குழு உள்ளார்களாம். அதாவது ஜுன் 19க்குள் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் கிடைத்தால் ஜுன் 26ம் தேதி படம் வெளியாகும் இல்லையெனில் அதிகபட்சம் ஜுலை 3க்குள் படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.






