கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! என்ன ஆனது?

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. டிஆர்பி-யில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது அந்த சீரியல்.
மதுமிதாவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டமும் கிடைத்து இருக்கிறது.
கலக்கத்துடன் வீடியோ
இந்நிலையில் நடிகை மதுமிதா தனது பூனையை காணவில்லை என கண்ணீர் உடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
பெங்களூரில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து நேற்று காலை பூனை காணாமல் போயுள்ளது. பெர்சியன் பூனை அது என்பது குறிப்பிடத்தக்கது.
பூனையை கண்டுபிடிக்க உதவும்படி அவர் வீடியோவில் கண்ணீருடன் கேட்டிருக்கிறார்.






