CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு! என்னனு பாருங்க

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வருகின்றனர். மோசமான நிலையில் இருக்கும் சினிமா துறையை காப்பாற்ற பல நடவடிக்கைகளை விஜய் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நேற்று ஆர்ஜே பாலாஜி விஜய்யை சந்தித்து பேசி இருந்தார். கருப்பு படம் தொடங்கி இருந்ததே அவரிடம் தான் என விஜய்யை பற்றி கூறி இருந்தார் அவர்.
இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன் விஜய்யை நேரில் சந்தித்து இருக்கிறார்.
பரிசு
விஜய்க்கு பரிசாக ஒரு ஓவியம் ஒன்றை நடிகர் பார்த்திபன் கொடுத்துள்ளார். அதில் “சினிமாயணம் to CMஆசனம்” என குறிப்பிட்டு சில வரிகளையும் விஜய்யை பாராட்டி அவர் எழுதி இருக்கிறார்.
என்ன எழுதி இருக்கிறார் என நீங்களே பாருங்க.






