ஏன் நானெல்லாம் கோட் சூட் போட கூடாதா? விமர்சனங்களுக்கு விஜய் ஆவேசமான பதிலடி

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறும் மாநாடு இன்று திருச்சியில் நடந்தது.
அதில் பேசிய விஜய் தற்போதும் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியே என மீண்டும் கூறினார். ஆட்சி அமைத்து ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என சொன்னவர்கள் எல்லாம் அரை மணி நேரத்திலேயே பேச தொடங்கிவிட்டார்கள். கல்யாண வீட்டில் எல்லாம் சென்று புலம்பி கொண்டிருக்கிறார்கள் என விஜய் பேசி இருக்கிறார்.
நான் கோட் போட கூடாதா..
நான் கோட் போடுவதை விமர்சிக்கிறார்கள். அதிகாரம் செய்பவர்கள், ஆதிக்க சக்திகள் மட்டும் தான் கோட் போட வேண்டுமா என்ன. நான் என்ன கலர் கலராவா கோட் போட்டுட்டு வரேன். பிளாக் அண்ட் ஒயிட் மட்டும் தான் போடுகிறேன்.
எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட் ஆக விஜய் இருப்பான் என காட்ட தான் இந்த கலர் போடுகிறேன். கருப்பு கலர் யாரை குறிக்கும் என்பதும் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு விஜய் கூறி உள்ளார்.






