த்ரிஷ்யம் 3 திரை விமர்சனம்

த்ரிஷ்யம் 3 திரை விமர்சனம்


த்ரிஷ்யம் 3

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் என்று ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் மோகன்லால்.

66 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் பல தரமான படங்கள் நடித்து வருகிறார், மிகப்பெரிய வெற்றியையும் காண்கிறார். அப்படி அவர் நடிப்பில் இதற்கு முன் வெளியான படங்களில் செம ஹிட்டான படம் தான் த்ரிஷ்யம்.

தற்போது இந்த படத்தின் 3வது பாகம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி உள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

மோகன் லால் தன் வாழ்க்கையில் நடந்ததையே ஒரு கதையாக எழுதி படமாக எடுக்கிறாத், திரிஷியம் என்ற பெயரிலேயே, அந்த படமும் ரூ 100 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆக, ஜார்ஜ் குட்டி இப்போது தயாரிப்பாளர் ஆகிறார்.

அதே நேரத்தில் ஊரே ஜார்ஜ் குட்டி கேஸை மறக்க, இனி நம் குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என ஜார்ஜ் குட்டி இருக்கிறார்.

தன் மகளுக்கு பையன் பார்க்க ஆரம்பிக்க, எல்லா சம்மந்தத்தையும் இரண்டு பேர் போன் செய்து, அந்த பெண்ணுக்கு மன ரீதியாக பிரச்சனை இருக்கிறது என சொல்லி திருமணத்தை தடை செய்ய வைக்கிறனர்.

யார் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என மோகன் லால் தேடி போக, அதே நேரத்தில் ஜார்ஜ் குட்டி வீட்டை நடு இரவு யாருக்கும் தெரியாமல் ஒருவர் தினமும் வந்து செல்ல, பிறகு மீண்டும் ஜார்ஜ் குட்டி குடும்பம் அந்த பிரச்சனைக்குள் போக, இதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மோகன் லால் வழக்கும் போல் தன் யதார்த்த நடிப்பில் கலக்கியுள்ளார், ஆனால் ஜார்ஜ் குட்டியிடம் ஒரு நகைச்சுவை உணர்வு இருக்கும், இந்த பாகத்தில் படம் முழுவதுமே மிக சீரியஸாகவே மோகன் லால் வந்து செல்கிறார்.

3வது பாகம் என்பதால் ஜார்ஜ் குட்டி மகள்கள் கல்லூரி செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர், ஆனால், ஜார்ஜ் குட்டி பிரச்சனை மட்டும் தீரவில்லை என்பது போல் புதிது புதிதாக ஜார்ஜ்க்கு பிரச்சனை வர, அதிலிருந்து அவர் மீண்டு வரும் காட்சி தான் இந்த பாகத்திலும்.

ஆனால் முதல் இரண்டு பாகத்திலிருந்த நேர்த்தியான ரைட்டிங் இதில் மிஸ்ஸிங், அதிலும் படத்தின் முதல் பாதி பொறுமையை சோதிக்கும் அளவிற்கு மெதுவாக ஊர்த்து செல்கிறது.

எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் இடைவேளை டுவிஸ்ட் தவிற எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை, படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது, அதிலும் கிளைமேக்ஸ் 20 நிமிடம் வழக்கம் போல் ஜார்ஜ் குட்டி ஆட்டம் ரசிக்க வைக்கிறது.

அது மட்டுமில்லை இல்லை என்றால் படம் மிகப்பெரிய சோதனையாக ஆகியிருக்கும்.

டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு, பின்னணி இசை நன்றாகவே இருந்தது.

க்ளாப்ஸ்

மோகன் லால்

படத்தின் இரண்டாம் பாதி

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி

முதல் 2 பாகத்திலிருந்து சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் இந்த திரிஷியம் 3 முதல் 2 பாகத்தில் இருந்த பதட்டமும் பரபரப்பும் இதில் இல்லை.

2.5/5


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *