வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ

வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

அண்ணாமலையின் உயிரே குடும்பம் என்றாலும் அவர் கஷ்டப்பட்டு கட்டிய வீடும் முக்கியம் தான்.

இப்போது குடும்பமும் பிரிந்தும், வீட்டை இழந்தும் சோகத்தின் உச்சத்தில் உள்ளார் அண்ணாமலை. ஆனால் தனது மகன் முத்து எப்படியாவது பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் தன்னை அந்த வீட்டிற்குள் அழைத்துச் செல்வான் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial New Promo

அதற்கு ஏற்றபடி இன்றைய எபிசோடில், வருமான வரித்துறை அதிகாரி உதவியுடன் பைனான்சியரை முத்து-மீனா சந்திக்க ஒரு உண்மை வெளியானது. அதாவது பைனான்சியர் அவர்களுக்கு கொடுத்த பணம் என்னுடையது இல்லை, அது சிந்தாமணி பணம் என்கிறார்.

பைனான்சியரிடம் இருந்தால் கூட கணக்கு காட்ட சொல்லி மிரட்டலாம், ஆனால் சிந்தாமணியிடம் இருந்து வீட்டுப் பத்திரத்தை வாங்குவது கஷ்டம் போல் தெரிவதாக அந்த அதிகாரி முத்து-மீனாவிடம் கூறுகிறார். 

வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial New Promo

புரொமோ

இப்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகிறது. அதில், முத்து-மீனா பைனான்சியர் சொன்ன விஷயத்தை விஜயா, அண்ணாமலையிடம் கூறுகிறார். அதைக்கேட்டு கோபப்பட்ட விஜயா பார்வதியுடன் சிந்தாமணி வீட்டிற்கு செல்கிறார்.

வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial New Promo

நீ பணம் கொடுத்துவிட்டு யாரோ ஒரு பைனான்சியர் பணம் கொடுத்தது போல் டிராமா போட்டிருக்கிறாய். உன் மகளுக்காக தானே இப்படி பணம் சேர்க்கிற, அவள் ஒன்றுமே இல்லாதவனுடன் தான் ஓடிப்போக போகிறாள் என கோபமாக கூறுகிறார்.

இதைக்கேட்ட சிந்தாமணி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *