நீதிமன்றத்தில் தடுமாறிய ஈஸ்வரி, அதிரடி காட்டிய ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில், அட இந்த பிரச்சனை எப்போது தான் முடியும், சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா என ரசிகர்கள் புலம்பும் ஒரு தொடராக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது.
தவறு செய்யும் குணசேகரன் தவறு செய்துகொண்டு தான் இருக்கிறார், அதில் இருந்து தப்பிக்க எப்போதும் செய்யும் விஷயங்களை செய்துகொண்டு தான் இருக்கிறார். அதேபோல் நியாயத்திற்காக போராடுவேன் என ஜனனியும் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்க்கிறார், ஆனால் அதில் ஜெயிக்காமல் போகிறார்.
இப்படியே வில்லன் கை ஓங்கி இருப்பது, நாயகி கை அதளபாதாளத்திற்கும் சென்ற வண்ணமே கதை உள்ளது. வில்லனை வீழ்த்தி எப்போது நாயகி ஜெயிப்பார் என்பதை காணவே ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி கதிர் ஞானத்துடன் நீதிமன்றம் வருகிறார். நீதிபதி கேள்வி கேட்க நான் படியில் இருந்து தவறி விழுந்துவிட்டேன் என ஈஸ்வரி கூற நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டது, இது மட்டும் எப்படி நியாபகம் உள்ளது என கேட்க அவர் தடுமாறுகிறார்.
பின் அந்த வழக்கின் தேதி மாற்றம் நடக்கிறது. கோபத்தில் வெளியே வந்த ஜனனி, இப்போது தேதியை மாற்றி நீங்கள் ஜெயித்திருக்கலாம், ஆனால் கண்டிப்பாக நியாயம் தான் ஜெயிக்கும் என ஈஸ்வரியிடம் கோபமாக கூறுகிறார்.






