Aakhri Sawal: திரை விமர்சனம்

சஞ்சய் தத், சமீரா ரெட்டி, நீது சந்திரா ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள Aakhri Sawal இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.
கதைக்களம்
மும்பை கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவின் HOD ஆக இருப்பவர் கோபால் நட்கர்னி (சஞ்சய் தத்). இவரது மாணவராக இருந்து RSS-யின் வரலாற்றை Thesis ஆக உருவாக்கப் போவதாக கூறுகிறார் விக்கி ஹெக்டே (நமஷி சக்ரபொர்த்தி).
ஆனால், RSS-க்கு எதிராக அவர் தனது Thesis-ஐ முடித்து ஒப்புதல் பெற பேராசிரியர் கோபால் முன்பு வருகிறார்.
சில காரணங்களைக் கூறி கோபால் அவரது Thesis-ஐ நிராகரிக்கிறார். இதனால் கோபமடையும் விக்கி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கோபால் மாணவர் விக்கியை அறைந்துவிடுகிறார். ஆனாலும், விக்கி விடுவதாக இல்லை.
இதையெல்லாம் கல்லூரியில் இருக்கும் மாணவர்களும், கோபாலுக்கு எதிராக இருக்கும் பேராசிரியை பல்லவியும் கவனிக்கின்றனர்.
இந்த புகைச்சலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று RSS-யின் உண்மைமுகத்தை வெளிக்காட்ட வேண்டும் என பல்லவி நினைக்கிறார்.
அதற்கேற்றாற்போல் RSS குறித்த சில கேள்விகளை பொதுவெளியில் விக்கி கேட்க, கோபாலும் நிதானமாக அதற்கு பதிலளிக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் கசிய, டிவியில் வேலை பார்க்கும் காவ்யா, கோபாலின் முன்னாள் மாணவர் மற்றும் ஹோஸ்ட் ஆக வேலைபார்க்கும் ஆதித்யாவிடம் இருவரையும் வரவழைத்து லைவ் ஆக ஷோ நடத்தினால் TRP எகிறும் என்கிறார்.
அதனைத் தொடர்ந்து மாணவரின் RSS எதிர்ப்பிற்கு கோபால் எப்படி விளக்கம் அளித்தார்? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மராத்தி பட இயக்குநர் அபிஜீத் மோகன் வாரங்க் ‘இறுதி கேள்வி’ (Aakhri Sawal) என்று பொருள்படும் இப்படத்தை, அரசியல் டிராமா கதையாக நேர்த்தியாக எடுத்துள்ளார்.
சமீப காலங்களில் வில்லனாகவே நாம் பார்த்து பழகிய சஞ்சய் தத்தை, அமைதியான பேராசிரியராக காட்டியிருக்கிறார் இயக்குநர் அபிஜீத்.
RSS குறித்த பொதுப்படையான விமர்சனங்கள், கேள்விகளை முன்வைத்து அதற்கு பதில்களை தரும் கதை என்றாலும் தொய்வில்லாத திரைக்கதையால் ஈர்த்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஐந்து கேள்விகள்தான் இப்படமே என்றாலும் அதற்கு என்ன மாதிரியான பதிலை ஹீரோ கதாபாத்திரம் தரப்போகிறது என்ற ஆவல் ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுகிறது.
சஞ்சய் தத் பிளேஷ்பேக்கை கூறும்போது அதனை கருப்பு, வெள்ளையாக காட்டியது, சில நிஜ மனிதர்களை சுட்டிக்காட்டியது என்பதெல்லாம் நல்ல மேக்கிங்.
என்றாலும் பின்னணி இசையுடன் பார்க்கும்போது சீரியல் பார்க்கும் உணர்வு பல இடங்களில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
நடிகர்களைப் பொறுத்தவரை சஞ்சய் தத் அனுபவ நடிகர் என்பதை ஒவ்வொரு ப்ரேமிலும் காட்டியிருக்கிறார்.
மாணவரை அமைதியாக எதிர்கொள்ளும்போது, உடைந்து அழும்போதும், கோபத்தை காட்டும்போதும் என பன்முகத்தை காட்டியிருக்கிறார்.
குறிப்பாக மன்னிப்பு கேட்டு கையெழுத்திட போகும் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.
சமீரா ரெட்டி தனக்கான காரியத்தை சாதித்தாக வேண்டும் என்று முயற்சிப்பதை முகபாவனைகளில் அழகாக காட்டியிருக்கிறார்.
உங்க கதையில நான் வில்லனா என்று சஞ்சய் தத்திடம் கேட்க, அதற்கு அவர் சமீராவுக்கு அளிக்கும் பதில் டாப்நாட்ச்.
விக்கியாக நடித்திருக்கும் நமஷி யதார்த்தமான நடிப்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
சஞ்சய் தத் அழுது பேசி முடித்ததும் Victim Card என்று அசால்ட்டாக நோஸ்கட் செய்து கிளாப்ஸ் வாங்குகிறார் நமஷி.
நீது சந்திராவுக்கு பெரிய வேலையில்லை; மிரினால் குல்கர்னி, அமித் சாத், திரிதா சௌத்ரி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.
எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களை விவாதத்திற்குள் கொண்டுவந்து நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஸ்டான்லி முத்தாவின் கேமரா, சஞ்சய் சன்க்லாவின் எடிட்டிங் கச்சிதம். மோன்டி ஷர்மாவின் பின்னணி இசை ஓகே ரகம்.
ளாப்ஸ்
சஞ்சய் தத்
திரைக்கதை
வசனங்கள்
பல்பஸ்
நாடகத்தன்மை மிகுந்த மேக்கிங்
மொத்தத்தில் Aakhri Sawal தேசிய அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு நல்ல ட்ரீட். அரசியல் டிராமா பட விரும்பிகள் பார்க்கலாம்.
க்ளாப்ஸ்
சஞ்சய் தத்
திரைக்கதை
வசனங்கள்
பல்பஸ்
நாடகத்தன்மை மிகுந்த மேக்கிங்
மொத்தத்தில் Aakhri Sawal தேசிய அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு நல்ல ட்ரீட். அரசியல் டிராமா பட விரும்பிகள் பார்க்கலாம்.






