மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
பணக்கார வீடு என்று ஆசைப்பட்டு விஜயா ஸ்ருதி அம்மா வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு மரியாதையை இழந்து கதறியபடி இரவோடு இரவாக அவர்களது வீட்டைவிட்டு மனோஜ் கடைக்கு வந்துவிட்டார் விஜயா.
இந்த விஷயம் கேள்விப்பட்டதும் முத்து-மீனா, மனோஜ் கடைக்கு வந்து விஜயாவை மீனா அம்மா வீட்டிற்கு வருமாறு கேட்கிறார்கள். ஆனால் வீட்டை இழந்த பின்பும் விஜயாவின் பணம் என்ற எண்ணம் போகவில்லை. அதென்ன மாளிகையா நான் அங்கு வந்து தங்குவதற்கு என ஏளனம் பேசுகிறார்.
பின் வீட்டிற்கு வந்த முத்து, இந்த விஷயத்தை அண்ணாமலையிடம் கூறி அவரை வந்து அழைக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் அண்ணாமலை நான் வந்து அழைக்க மாட்டேன், விஜயாவே இங்கு வந்தால் வரட்டும் என்கிறார்.
மனம் தாங்காத அண்ணாமலை மனோஜ் கடைக்கு சென்று விஜயாவை பார்க்கிறார். அந்த சமயத்தில் முத்து, மீனா இருவரும் தனித்தனியாக வருகிறார்கள். 3 பேரும் விஜயாவை மீனா அம்மா வீட்டிற்கு வருமாறு கேட்கிறார்கள்.
கடைசியில் எப்படியோ சம்மதித்த விஜயா அண்ணாமலையுடன் வருகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், ஒரு வாரம் இந்த வீட்டில் எப்படித்தான் இருக்கப்போகிறேன் என விஜயா புலம்புகிறார். பலகுரல் வீட்டில் நடந்தது போல இங்கே நடக்காது, வருந்தாதீர்கள் என ஆங்கிலத்தில் முத்து கூறுகிறார்.
இதைக்கேட்ட விஜயா நான் பெரிய இங்கிலீஷ் காரி போல் பந்தா காட்டுவதாக அவர் கூறுகிறான் என சொல்ல அண்ணாமலை அவர்கள் ஆங்கிலம் கற்கிறார்கள் என்றார்.
உடனே விஜயா கேலி செய்து சிரிக்க முத்து-மீனா வருத்தப்படுகிறார்கள்.






