ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ நினைக்கும் அண்ணாமலை என்பவரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
அண்ணாமலைக்கு தெரியாமல் விஜயா-மனோஜ் கையெழுத்து போட்டு பணம் வாங்கியதால் இப்போது பிரச்சனை வெடித்துள்ளது. சிந்தாமணி பைனான்சியரை வைத்து அண்ணாமலை வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
வீட்டிற்கு சீல் வைப்பதை பார்க்க வேண்டும் என அண்ணாமலை மீனா அம்மா வீட்டிற்கு செல்ல, விஜயா ஸ்ருதி அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். மனோஜை அவரது ஷோரூமில் தங்கியுள்ளார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனா அம்மா வீட்டில் அண்ணாமலைக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. ஆனால் விஜயாவிற்கு ஸ்ருதி அம்மா வீட்டில் கஷ்டப்படுகிறார். பால் இல்லாத காபி, குண்டு குண்டாக அரிசி சாப்பாடு என விஜயாவிற்கு ஸ்ருதி வீட்டில் எதுவும் சரியாக கிடைக்கவில்லை.
நாளைய எபிசோட் புரொமோவில், ஸ்ருதி அம்மா-அப்பா எங்கோ வெளியில் செல்கிறார்கள். அப்போது வீட்டில் உள்ள எல்லா அறைகளையும் பூட்டிவிட்டு செல்கிறார்கள், அதைப்பாத்து விஜயா செம ஷாக் ஆகிறார்.
பின் பார்வதிக்கு நடந்த விஷயத்தை கூறி இங்கு இருக்க பிடிக்கவில்லை, நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்கிறார். உடனே பார்வதி, நீ உன் புருஷனுடன் இங்கு வந்தால் வா இல்லையெனில் நீ அவர் இருக்கும் இடத்திற்கு செல், அதுதான் உனக்கு மரியாதை என்கிறார்.






