போட்ரா வெடிய வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் விவரம்…

போட்ரா வெடிய வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் விவரம்…


ஜனநாயகன்

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே எப்போதும் ஸ்பெஷல் தான். அதிலும் அவரது திரைப்பயணத்தில் கடைசிப்படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

அப்படி பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்தார்.

இப்படம் 2026, பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருந்தது, ஆனால் படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனையால் வெளியாவதில் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

படத்தின் இசை வெளியீடு எல்லாம் இதற்கு முன் எந்த ஒரு பட இசை வெளியீடும் நடக்காத அளவிற்கு படு பிரம்மாண்டமாக கடந்த வருடம் மலேசியாவில் நடந்தது.

படமும் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை.

போட்ரா வெடிய வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் விவரம்... | Vijay Jananayagan Movie New Release Date


தகவல்



படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் விஜய் தேர்தல் வேலைகளில் இருந்ததால் அவரது ரசிகர்களும் அந்த விஷயங்களில் அவரை பின்தொடர்ந்து வந்தார்கள்.

தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் குறித்து சூப்பர் தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் ஜனநாயகன் படத்தை மே 8 அல்லது மே 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

போட்ரா வெடிய வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் விவரம்... | Vijay Jananayagan Movie New Release Date


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *